வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ‘எச்1பி விசா’வுக்கு நிர்ணயிக்கப்பட்ட, 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக, அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது. பொதுவாக, தொழில்நுட்பத் துறை உயர் பதவிகளுக்கு, இந்த விசா வழங்கப்படும். இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா, சீனா முன்னிலையில் உள்ளன.
குறிப்பாக, மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன.வரும் 2023ம் ஆண்டில், 65 ஆயிரம் எச்1பி விசா மற்றும் அமெரிக்காவில் உயர்கல்வி முடித்தோருக்கு, 20 ஆயிரம் விசாக்கள் வழங்க, பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வகை விசாக்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு தகவல் அனுப்பும் பணி துவங்கி உள்ளதாக, அது கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement