எந்தெந்த ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறுகின்றன?

பொதுவாகவே கூகுள் தயாரிப்பு மொபைல்களான pixelகளில்தான் இந்த அப்டேட்கள் கிடைக்கப்பெறும். அதற்கு பிறகு எந்த ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை வெளியிட போகின்றன என்பதை நாங்கள் உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

ரியல்மீ (Realme)
ஸ்மார்ட் போன் வரிசையில் முதலிலேயே ஆண்ட்ராய்டு13 க்கான செயல்பாடுகளை துவங்கிய நிறுவனம் ரியல்மீதான். RealMe GT 2 பயனீட்டாளர்கள் குறைந்த பயனாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் பெட்டா டெஸ்டிங்கிற்கு ஆகஸ்ட் 4 முதலே விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனாலும் , இன்னும் எந்த தேதியில் ஆண்ட்ராய்டு13 பயன்பாட்டிற்கு வரும் என்று நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.

ஜியோமி (Xiaomi)
சீனாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜியோமி இந்தியாவில் முக்கியமான மொபைல் போன் விற்பனை தளம். அது தன்னுடைய Xiaomi12 மற்றும் 12Pro வுக்கு ஆண்ட்ராய்டு13 சார்ந்த MIUI பெட்டாவை அறிவித்துள்ளது. மேலும் எந்த விதமான அம்சங்களையோ அல்லது என்றிலிருந்து பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலையோ நிறுவனம் வழங்கவில்லை.

மோட்டா (Moto)
ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை பெரும் ஓட்டத்தில் மோட்டோவும் பங்கேற்றுள்ளது. மோட்டோவின் 10 ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை பெறுவதாக அதன் அதிகாரபூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் Moto Edge 30 Pro வுடன் சேர்த்து 4 Edge சீரிஸ் மொபைல்கள் , ஆறு G சீரிஸ் மொபைல்கள் ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Moto Edge சீரிஸில் Moto Edge 30, Moto Edge+ (2022), Moto Edge (2022) , Moto Edge 30 Pro ஆகியவை அடங்கும். Moto G சீரிஸில் Moto G 5 G (2022), Moto G Stylus 5G (2022), Moto G82 5G, Moto G62 5G, Moto G42 , Moto G32 ஆகியவை ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை பெற இருக்கின்றன.

சாம்சங் (samsung)
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் சாம்சங் ONEUI 5 பெட்டா ப்ரோக்ராமை அறிவித்தது.அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருக்கும் Galaxy S22 பயனாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி பார்க்க முடியும். மற்ற நாடுகளில் இருக்கும் பயனாளர்களுக்கு இதை விரிவுபடுத்துவதை நோக்கி சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால், எந்த விதமான குறிப்பிட்ட தேதியும் அறிவிக்கப்படவில்லை.

விவோ (Vivo)
Vivo X80 பயனாளர்கள் மட்டுமே தற்போதைக்கு விவோவின் ஆண்ட்ராய்டு13 ப்ரீவியூ ப்ரோக்ராமில் பங்கேற்க முடியும்.அதனை ஆகஸ்ட் 23லிருந்து துவங்க போவதாக அறிவித்த விவோ அதில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஒன்பிளஸ் (OnePlus)
மற்ற நிறுவனங்களை போலவே ஆண்ட்ராய்டு13 பயன்பாட்டிற்கு வரும் தேதியை ஒன்பிளஸ் நிறுவனமும் அறிவிக்கவில்லை. அனால் OnePlus 10T யோடு சேர்த்து colorOSஐ அடிப்படையாக கொண்ட OxygenOS 13 ஐ அறிவித்திருக்கிறது. OnePlus 10Tஐ தொடர்ந்து முதலில் OnePlus 10Pro வில் ஆண்ட்ராய்டு13 அப்டேட் செய்யப்படும். மேலும் OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 9R, OnePlus 9RT, OnePlus 10R ஆகியவை ஆண்ட்ராய்டு13 அப்டேட் பெறுகின்றன. அதே போல் OnePlus Nord 2, OnePlus Nord 2T, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus Nord CE 2 Lite ஆகியவையும் ஆண்ட்ராய்டு13 அப்டேட் பெற இருக்கின்றன.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.