ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது – வெளியான புதிய உத்தரவு

வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என ஆராய காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி;f கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார்.
image

இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சந்திரசேகரன், இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றாலும்,  இருசக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவிகித வட்டியுடன்  அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை காப்பீட்டு நிறுவனம் ஆராய வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.