கூகுளில் இருந்து விலகி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இணைந்த சிவானந்தன்… யார் இவர் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நிர்வாக துணை தலைவராக கூகுள் நிறுவனத்தின் மூத்த ஊழியர் சஜித் சிவானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுளில் இருந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இணைந்த சிவானந்தன், அக்டோபரில் தனது புதிய பொறுப்பை ஏற்று, இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார்.

சிவானந்தன் வருகையால் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மேலும் சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஃகு உற்பத்தியில் உலகின் நம்பர் ஒன் நாடாகும் இந்தியா… அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

டிஸ்னி ஹாட்ஸ்டார்

டிஸ்னி ஹாட்ஸ்டார்

டிஸ்னி ஹாட்ஸ்டார் தற்போது ஒரு சவாலான காலகட்டத்தில் நுழையும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனத்தில் பெரும் அனுபவம் வாய்ந்த சிவானந்தனை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளது.

கூகுளின் அனுபவம்

கூகுளின் அனுபவம்

சிவானந்தன் நியமனம் குறித்து வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சர்வதேச உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகளின் தலைவர் ரெபேக்கா காம்ப்பெல் கூறுகையில், ‘சஜித் எங்கள் நிர்வாகக் குழுவில் இணைந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் புதுமையான குழுவை வழிநடத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது அனுபவம், வலுவான தலைமைத்துவம் மற்றும் வணிக மேலாண்மை திறன்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு பெரிதும் பயனளிக்கும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கூகுள் பே
 

இந்தியாவில் கூகுள் பே

இந்தியாவில் கூகுள் பேவை உருவாக்கிய சிவானந்தன் டிஸ்னி ஹாட்ஸாரின் இந்தியாவில் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பார். மேலும் ஸ்ட்ரீமிங் சேவையின் வணிக முன்னுரிமைகளை வரையறுப்பார் என்றும், ஹாட்ஸ்டாரின் வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிடுவார் என்றும் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுளில் 14 ஆண்டுகள்

கூகுளில் 14 ஆண்டுகள்

சிவானந்தன் 14 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பதும், கூகுளின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான Google Pay மற்றும் நெக்ஸ்ட் பில்லியன் யூசர் முன்முயற்சிகளின் நிர்வாக இயக்குநராகவும், வணிகத் தலைவராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவானந்தன் இந்தியாவில் Google Payயை வழிநடத்தி, வணிகத்தை அடித்தளத்தை மேம்படுத்தினார்.

தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டேன்

தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டேன்

சிவானந்தன் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்டார் டிவியில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார், அங்கு அவர் சேனல் Vக்கான வட இந்திய சந்தையை நிர்வகித்தார். தற்போது மீண்டும் டிஸ்னிக்கு திரும்பியது குறித்து அவர் கூறியபோது, ‘நான் எனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய இடத்திற்கு திரும்பி வந்துவிட்டேன். இந்தியாவிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு சேவை செய்ய மிகவும் திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றது எனக்கு கௌரவம்’ என்று கூறியுள்ளார்.

80 மில்லியன் சந்தாதாரர்

80 மில்லியன் சந்தாதாரர்

சிவானந்தன் வருகை காரணமாக இந்தியாவில் வால்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கான சந்தாதாரர் இலக்கை வரும் 2024 நிதியாண்டின் இறுதிக்குள் சேவை 80 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கிறது. அதேபோல் உலக அளவில் 2024 நிதியாண்டின் இறுதிக்குள் டிஸ்னிக்கு 215 மில்லியன் முதல் 245 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Disney ropes in Google veteran Sajith Sivanandan to lead Disney Hotstar

Disney ropes in Google veteran Sajith Sivanandan to lead Disney Hotstar | கூகுளில் இருந்து விலகி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இணைந்த சிவானந்தன்… யார் இவர் தெரியுமா?

Story first published: Wednesday, August 24, 2022, 8:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.