கொஞ்சம் தாடி, பண வசதியுடன் எனக்கு ஒரு ‘பாய் பிரண்ட்’ வேண்டும்!; 2வது திருமணத்திற்காக ஏங்கும் நடிகை

ஐதராபாத்: இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக கொஞ்சம் தாடி, பண வசதியுடன் கூடிய பாய் பிரண்ட் வேண்டும் என்று தெலுங்கு நடிகை சுரேகா வாணி கேட்டுள்ளார். ெதலுங்கு பட நடிகை சுரேகா வாணியின் கணவர் இறந்த பின்னர் அவர் தனது மகள் சுப்ரிதாவுடன் வசித்து வருகிறார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சுரேகா வாணி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மாடர்ன் டிரஸ்ஸில் தனது மகளுடன் போட்டி போட்டு சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பலரும் கேள்வி எழுப்பி வருகிறன்றனர். இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.

ஆனால் எனது மகள் சுப்ரிதா, நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். தற்போதைக்கு இரண்டாவது திருமணத் திட்டம் குறித்து எதுவும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வேன். நீங்கள் விரும்பும் நபரையும் கண்டுபிடித்தீர்களா? என்று கேட்கின்றனர். ஆனால், தற்போதைக்கு யாருமில்லை. ஆனால் தனக்கு ஒரு ‘பாய் பிரண்ட்’ வேண்டும். என்னை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். நல்ல உயரமும் ஆளுமை திறமையும் உள்ள ஒருவர் வேண்டும். கொஞ்சம் தாடி இருக்க வேண்டும். வசதியானவராக இருக்க வேண்டும். இதுபோன்ற பாய் பிரண்ட் கிடைத்தால் அவரை நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.