சோமேட்டோ ஊழியருக்கு நடு ரோட்டில் அடி.. வேலை நிலைக்குமா.. ஊழியர் கதறல்..!

சமீபத்திய காலமாக உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஊழியர்கள் பலரும் தாக்கப்படுவதும், அவ்ர்களை திட்டி அசிங்கப்படுவதும் போன்ற பல செயல்கள் அரங்கேறி வருகின்றன.

காலம் நேரம் பாராமல் உணவு டெலிவரி செய்யும் இந்த ஊழியர்கள், கடும் வெயில், மழைகாலங்களில் மழை, கடுமையான டிராஃபிக் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் உணவு டெலிவரி செய்து வருகின்றனர்.

ஆனால் வீட்டில் இருந்து கொண்டு ஆர்டரை பெறும் வாடிக்கையாளர்கள் சிலர், சில காரணங்களுககாக திட்டுவதும், அவர்களை காயப்படுத்துவதும் சில சமயங்களில் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள் பலவும் ஆர்டர்கள் தாமதமாக வருவதால் இருக்கின்றன.

கைக்குழந்தை உடன் உணவு டெலிவரி செய்த சோமேட்டோ பெண் ஊழியர்..! டிரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ..!

 நடுரோட்டில் செருப்பால் அடி

நடுரோட்டில் செருப்பால் அடி

இப்படி ஏதோவொரு காரணத்திற்காக சோமேட்டோ ஊழியர் ஒருவரை நடு ரோட்டில் வைத்து, ஒரு பெண் செருப்பால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றது. இது பார்ப்போரின் மனதை கலகடிக்கும் விதமாக வந்துள்ளது.

இது dj@bagas04 என்ற பெயரிடப்பட்ட ட்விட்டர் பயனர் ஒருவர் தனது, ட்விட்ட்டர் பக்கத்தின் இந்த வீடியோவினை பகிர்ந்துள்ளார்.

வேலை போய்விடுமோ?

வேலை போய்விடுமோ?

இது குறித்து dj@bagas04 பயனர் பதிவிட்டுள்ள வீடியோவில் சோமேட்டோ ஊழியர் செருப்பால் தாக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.

இது குறித்து கருத்து தெரிந்துள்ள அந்த பயனர், எனது ஆர்டரை டெலிவரி செய்ய வந்த அந்த சோமேட்டோ ஊழியரிடம் இருந்து, (#4267443050) ஒரு பெண் டெலிவரி ஊழியரிடம் இருந்து ஆர்டரை பெற்றுக் கொண்டு, அவரை செருப்பால் அவரை அடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் பயந்து கொண்டு தனது வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில், அழுது கொண்டே தன் இடத்துக்கு வந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு குறித்த அச்சம்
 

பாதுகாப்பு குறித்த அச்சம்

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், பலரிடமும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஒரு பெண் சோமேட்டோ டெலிவரி ஊழியரிடம் இருந்து உணவு பார்சலை வாங்கிக் கொண்டு, தனது காலணியால் அவரை தாக்குவதை பார்க்க முடிகிறது. இது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து, அச்சத்தினை ஏற்படுத்துவதாக பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஊழியருக்கு உதவுங்கள்

ஊழியருக்கு உதவுங்கள்

இது குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பயனர், நான் எனது ஆர்டர் குறித்து கவலைப்படவில்லை. அந்த ஊழியருக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். தயவு செய்து அவருக்கு உதவுங்கள். அவரின் வேலையை காப்பாற்றுங்கள் என்று அவர்களின் வாடிக்கையாளார் சேவையை தொடர்பு கொண்டு கூறினேன்.ஆனால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் என்னை ரைடர்ஸ் அல்லது ரைடர் சப்போர்ட்டுக்கு கால் செய்ய கூறினார்கள்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நான் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கன்னடத்தில் பேசினார்கள். நான் உங்கள் வாடிக்கையாளார் பிரதி நிதியிடம் பேச வேண்டும். நடந்ததை முழுவதும் கூற வேண்டும் என்றும் கூறினேன். தயவு செய்து ஆராய்ந்து அவருக்கு உதவுங்கள் என கூறினேன்.

சோமேட்டோவின் கருத்து

சோமேட்டோவின் கருத்து

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சோமேட்டோ கேர், இதனை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நாங்கள் இதனை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என்றும் பதிவிட்டுள்ளது.

எனினும் என்ன தான் நடந்தது. ஏன் அந்த ஊழியர் தாக்கப்பட்டார், சோமேட்டோவின் பதில் என்ன என்பது குறித்து விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சோமேட்டோ

English summary

zomato employee hit in the middle of the road: Employee cries for job status

zomato employee hit in the middle of the road: Employee cries for job status/சோமேட்டோ ஊழியருக்கு நடு ரோட்டில் அடி.. வேலை நிலைக்குமா.. ஊழியர் கதறல்..!

Story first published: Wednesday, August 24, 2022, 15:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.