தமிழ்நாடு, புதுச்சேரிக்கு அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (24.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்
கனமழை
முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.08.2022 மற்றும் 28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நீடாமங்கலம் (திருவாரூர்) 11, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 10, கீழச்செருவாய் (கடலூர் மாவட்ம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்) 9, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்) தலா 8, மன்னார்குடி (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), செங்கம் (திருவண்ணாமலை), திருச்செங்கோடு (நாமக்கல்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), முகையூர் (விழுப்புரம்) தலா 7, போளூர் (திருவண்ணாமலை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), வானூர் (விழுப்புரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) தலா 6,
அம்முண்டி (வேலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பெரம்பூர் (சென்னை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கொடவாசல் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), தொழுதூர் (கடலூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 5,
ஆரணி (திருவண்ணாமலை), சேந்தமங்கலம் (நாமக்கல்), செந்துறை (அரியலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), நன்னிலம் (திருவாரூர்), நெய்வேலி AWS (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செஞ்சி (விழுப்புரம்), அரிமளம் (புதுக்கோட்டை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), திண்டிவனம் (விழுப்புரம்), கலவை AWS (ராணிப்பேட்டை), செட்டிகுளம் (பெரம்பலூர்), DGP அலுவலகம் (சென்னை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 4,
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கடலூர் (கடலூர்), MGR நகர் (சென்னை), நடுவட்டம் (நீலகிரி), சோலையாறு (கோயம்புத்தூர்) பெலாந்துறை (கடலூர்), ஏற்காடு (சேலம்), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஓமலூர் (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), சிவகிரி (தென்காசி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அருப்புக்கோட்டை KVK (விருதுநகர்) தலா 3,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
24.08.2022: குமரிக்கடல் – லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
26.08.2022:குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
27.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.