சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக, இலங்கையை சேர்ந்த இளைஞரை கைது செய்து, நகைகள், பணம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்த வசந்த், செல்வகுமார், மகிதாராணி ஆகியோரது வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டன. கேணிக்கரை போலீசார் விசாரித்தனர்.வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் சேகரித்த கைரேகைகள், கோவை கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவான இலங்கை இளைஞர் அப்துல் ரியாஸ்கான் கைரேகையுடன் ஒத்து போனது.
இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை போலீசார் அவரை தேடினர். புதுச்சேரி அண்ணாநகரில் பதுங்கியிருந்த அப்துல் ரியாஸ்கானை கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த அவர், 2019ல் கள்ளப்படகில் தமிழகம் வந்து புதுச்சேரியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே முகமதியாபுரத்தில் தங்கியிருந்தார்.அப்போது ஆளில்லாத வீடுகளின் கதவை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளார். இவர் மீது பல்வேறு இடங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement