சென்னை
:
தேமுதிக
தலைவர்
விஜயகாந்த்
நலமுடன்
உள்ளதாக
அவரது
மனைவியும்
கட்சியின்
பொருளாளருமான
பிரேமலதா
தெரிவித்துள்ளார்.
மாதிரி
யாரையும்
பாக்கல..’-
SA
Chandrasekhar
Interview
|
Part
1
|
Filmibeat
Tamil
கடந்த
76வது
சுதந்திர
தினக்கொண்டாட்டத்தின்போது
அவர்
தேசியக்
கொடியை
ஏற்றினார்.
அப்போது
உடல்நிலை
சரியில்லாத
அவரை
கஷ்டப்படுத்துவதாக
விமர்சனங்கள்
எழுந்தது.
இந்நிலையில்
நாளைய
தினம்
விஜயகாந்தின்
தன்னுடைய
70வது
பிறந்தநாளை
கொண்டாடவுள்ளார்.
நடிகர்
விஜயகாந்த்
நடிகராக
பல
சிறப்பான
படங்களை
கொடுத்துள்ளார்
நடிகர்
விஜயகாந்த்.
இவரது
பல
படங்கள்
சமூக
அக்கறையுடன்
வெளியாகின.
பறந்து
பறந்து
வில்லன்களை
அதகளம்
செய்வது
இவரது
ஸ்டைலாக
ஒரு
காலத்தில்
இருந்தது.
தொடர்ந்து
ரமணா,
வானத்தைப்
போல
போன்ற
படங்களில்
பக்குவமான
நடிப்பையும்
விஜய்காந்த்
வெளிப்படுத்தினார்.
அரசியல்
கட்சித்
தலைவர்
தன்னுடைய
படங்களின்மூலம்
ஏராளமான
ரசிகர்களை
பெற்ற
விஜய்காந்த்,
அரசியலிலும்
கால்
பதித்து
அதன்மூலம்
ஏராளமான
தொண்டர்களையும்
பெற்றுள்ளார்.
இந்நிலையில்
சமீப
காலங்களில்
இவரது
உடல்நிலை
மோசமடைந்துள்ளது.
வெளிநாட்டில்
சென்று
சிகிச்சைப்
பெற்றுவந்த
விஜய்காந்தின்
உடல்நிலை
சிறப்பாக
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
தேசியக்
கொடி
ஏற்றிய
விஜயகாந்த்
ஆனால்
கடந்த
76வது
சுதந்திர
தினத்தையொட்டி
கட்சி
வளாகத்தில்
தேசியக்
கொடியை
ஏற்றிய
விஜய்காந்த்தின்
தோற்றத்தை
பார்த்த
தொண்டர்கள்
மிகுந்த
வருத்தமடைந்தனர்.
மேலும்
உடல்நிலை
சரியில்லாத
அவரை
இதுபோன்ற
நிகழ்ச்சிகளுக்கு
அழைத்துவந்து
ஏன்
கஷ்டப்படுத்துகிறார்கள்
என்ற
விமர்சனங்களும்
எழுந்தன.
வதந்திகளை
பரப்ப
வேண்டாம்
இந்நிலையில்,
இன்றைய
தினம்
கட்சி
நிர்வாகிகளுடன்
கலந்துக்
கொண்ட
ஆலோசனைக்
கூட்டத்தில்
பேசிய
பிரேமலதா,
சுதந்திர
தினத்தின்போது
ரசிகர்களை
சந்திக்க
வேண்டும்
என்று
தலைவர்
ஆர்வம்
காட்டியதால்தான்
அவரை
அழைத்து
வந்ததாகவும்,
இதை
யாரும்
திரித்து
வதந்திகளை
பரப்ப
வேண்டாம்
என்றும்
கேட்டுக்
கொண்டுள்ளார்.
விஜயகாந்த்
பிறந்தநாள்
இந்நிலையில்
நாளைய
தினம்
விஜயகாந்தின்
பிறந்தநாளையொட்டி,
அவரது
தொண்டர்கள்
அவரை
நேரில்
காண
வரலாம்
என்றும்
அவர்
தெரிவித்துள்ளார்.
நாளைய
தினம்
விஜயகாந்தின்
பிறந்தநாளையொட்டி
கட்சி
மற்றும்
ரசிகர்கள்
சார்பில்
பல்வேறு
நலத்திட்டங்கள்
திட்டமிடப்பட்டுள்ளன.