நெருங்கும் காவல்துறை? திமுகவில் கரை ஒதுங்கும் வி.சி.ஆறுகுட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியில் நாள்தோறும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானது பின்னர் அவசர அவசரமாக ராஜினாமா செய்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம், ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, அதிருப்தி அணி, அமமுக, சசிகலா ஆதரவு என கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் உள்ள இடியாப்ப சிக்கலால் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகின்றன. அதில் திமுக ஒருபடி முன்னேறி செல்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை தட்டிப்பறிக்கும் வகையில் திட்டம் தீட்டி வரும் திமுக தலைவர்

, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்துள்ளார். அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கும் பொறுப்புடன் கட்சியை வளர்க்கும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து வரும் செந்தில் பாலாஜி அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் உள்ளிட்டோரை திமுகவில் இணைய வைத்து கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில், இன்று கோவையில் நடைபெறும் திமுக நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முக்கியமானவராக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி பார்க்கப்படுகிறார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஆறுகுட்டி, கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக பார்க்கப்படும் இருவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.

கட்சியின் செயல்பாடுகளில் சிறிது காலம் ஒதுங்கிருந்த ஆறுகுட்டி, அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் செயல்பாடு குறித்து கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்வது சரியல்ல. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும். அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம்” என்று கருத்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசிய ஆறுகுட்டி தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் காவல் துறையினர் வி.சி.ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடத்திய நிலையில், எங்கே இந்த வழக்கில் தங்களை சேர்த்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே ஆறுகுட்டி திமுகவின் பக்கம் செல்லும் முடிவை எடுத்திருக்கலாம் என முத்த பத்திரிகையாளர் கிரிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.