கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அவர். லிப்டி என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுபவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாணவி லிப்டி நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தலையில் காயங்களுடன் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். முதலுதவி பெற்ற பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மருத்துவமனையில் இருந்து தகவல் சென்றதை அடுத்து குளச்சல் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது குளச்சல் போலிஸில் புகாரளித்த லிப்டி, “நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன் மற்றும் கல்லூரி தோழிகளுடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாரானேன். அப்போது அங்கே வந்த எனது பள்ளி தோழனான சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு என்னையும் கட்டையால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு, தப்பி ஓடிவிட்டான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தார்.
இதுசம்பந்தமாக போலீஸார் அஜின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜின் தலைமறைவாக உள்ளார். அதே சமயம் போலீஸார் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஆணுறைகளும், மது பாட்டில்களும், உள்ளாடைகளும் ஆங்காங்கே கிடந்துள்ளன. இதெல்லாம் என்னவென்று லிப்டியுடன் இருந்ததாக கூறப்பட்ட பெண்களிடம் கேட்டுள்ளனர். `எல்லாம் லிப்டிக்குத்தான் தெரியும்’ என தோழிகள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையே லிப்டியின் தோழி ஒருவரின் ஆடியோ வாட்ஸ்அப்களில் வெளியாகியுள்ளது. அதில், `நான் மதுவுக்கு ஆசைப்பட்டு ஒருநாள்தான் அங்கு சென்றேன். உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டேன். அதன்பிறகு அவர்கள் அழைத்தார்கள். நான் போகவில்லை’ எனவும் ஆடியோவில் கூறியுள்ளார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “லிப்டி கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவரின் தாயும் தந்தையும் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகின்றனர். கல்லூரி சென்றுவர வாய்ப்பாக இருக்கும் என லிப்டி குளச்சல் பர்ணட்டிவிளையில் உள்ள தனது உறவினரின் பங்களாவில் தனியாக வசித்து வந்துள்ளார். லிப்டியும் அஜினும் பள்ளின்படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
பகலில் அஜினுடன் ஊர் சுற்றும் லிப்டி, இரவில் குரூப் ஸ்டடி எனக்கூறி தனது பங்களாவில் தோழிகளுடன் மது, சிகரெட் என ஜாலியாக இருப்பது வழக்கமாம். சில நேரங்களில் ஆண் நண்பர்களையும் அழைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. போதையில் ஆண் நண்பர்களுடன் கூட்டாக நெருக்கமாக இருப்பதற்கு ‘ஜாயின்ட் அடித்தல்’ என பெயரும் வைத்துள்ளனர்.
மேலும் தனது தோழிகளையும் மது குடிக்கவும், சிகரெட் அடிக்கவும் வீட்டுக்கு அழைப்பாராம் லிப்டி. புதிதாக வீட்டுக்கு வரும் தோழிகள் அங்கு இருக்கும் ஆண் நண்பர்களை பார்த்த்து `இது யார்?’ எனக்கேட்டால், `இவர்கள்தான் நமக்கு மது ஏற்பாடு செய்கிறவர்கள்’ எனச்சொல்வாராம். அனைவரும் போதை ஆன பிறகு லிப்டி ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்து, தனது தோழிகளுக்கு ஆசையை தூண்டுவாராம். பின்னர் அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்படி தோழிகளிடம் சொல்வாராம். இப்படி அடிக்கடி அந்த பங்களாவில் நடந்துவந்துள்ளது.
லிப்டியின் ஜாயின்ட் அடிக்கும் பழக்கம் அஜினுக்கு தெரியவரவே அதுபற்றி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை வெடித்திருக்கிறது. சம்பவத்தன்று லிப்டி ஆண் நண்பர்களுடனும், தோழிகளுடனும் பங்களாவில் இருக்கும் விஷயம் தெரிந்து இரவு நேரத்தில் பங்களாவுக்கு சென்றுள்ளார். பங்களா அருகில் நின்ற மரத்தின் மீது ஏறி உள்ளே சென்று பார்த்துள்ளார் அஜின். அங்கு லிப்டியும், தோழிகளும் ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளதை அஜின் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜின் கட்டையால் அவர்களை அடித்து விரட்டியுள்ளார். மேலும் லிப்டியின் மண்டையை அடித்து உடைத்திருக்கிறார். அஜின் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும்” என்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைக்கு மாவட்ட எஸ்.பி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்ட்டியில் கலந்து கொள்ள மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.