சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் யோகா, ஆயுர்வேதா, சித்தா உள்பட 9 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 9 பாடங்களில், ஏதேனும் 2 பாடங்களை கட்டாயப் பாடமாக படிக்கவேண்டும் இறுதியாண்டில் படிக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்பில் 2021 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான மாற்றி அமைக்கபட்ட பாடத்திட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வியில் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியப் பாடத்திட்டத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில் வளர்ச்சி, ஆங்கில ஆய்வகம், தொடர்பு ஆய்வகம், அந்நிய மொழி ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகமானது முதற்கட்டமாக 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3-ம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போத 9 புதிய பாட்டத்திட்டங்களை அறிவித்து உள்ளது. அதன்படி, யோகா, ஆயுர்வேதா, சித்தா, திரைப்பட மதிப்பீடல், இந்திய அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வரலாறு, மனித நேய சமூகத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதாரம், மாநிலம், தேசிய கட்டமைப்பில் இந்தியாவின் வரலாறு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பாடத்திட்டங்கள் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கட்டாய பாடத்தலைப்புகளில் 9 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்தலைப்புகளில் ஏதேனும் 2 பாடங்களை மாணவர்கள் கட்டாயம் எடுத்து படிக்க வேண்டும்.
1.Introduction to women and general studies
2.Elements of literature
3.Film appreciation
4.Disaster Management
5.Yoga, Ayurveda, Siddha
6.History of science and technology in India
7.State nation building politics in India
8.Industrial safety
9.Political and economic thought for human society
மேலும், மாணவர்கள் படிக்கும் பிரிவில் சிறப்பான தொழில் பயிற்சியை பெறும் வகையிலும் பாடத்தலைப்புகளில் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்பை எடுத்துப் படிக்கலாம் அல்லது தொழில்முறைப் படிப்புகளில் வெவ்வெறு தலைப்பினை எடுத்தும் 5 மற்றும் 6 வது செமஸ்டரில் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர்கள் பொறியியல் படிப்பினைக் கடந்து தங்கள் பண்பாடு, மொழி, கலாசாரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் நோக்கில் இத்தகைய தலைப்புகளில் பொறியியல் படிப்பில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.