மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசியின் ஆயில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குத்தாலத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் எண்ணெய் எரிவாயு சேமிப்பு நிலையம் அருகே விளாவடி காலனியில் புகழேந்தி என்பவர் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் உள்ள போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசி நிறுவன ஆயில் கலந்து வருவதால் காவி நிறமாக மாறி தண்ணீரின் மேலே ஆயில் மிதந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தங்கள் பகுதியில் நிலத்தடி நீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர்-வடிகால் வாரியத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.