வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கைக்குழந்தையை மடியில் கட்டிக்கொண்டு, மற்றொரு மகனை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வீடு வீடாக உணவு விநியோகத்தில் பாசக்கார தாய் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உணவு தொடர்பான கட்டுரைகளை எழுதி வரும் சவுரப் பஞ்வானி என்பவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சோமோட்டோ நிறுவனம் சார்பில் உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், பணியின் போது, தனது கைக்குழந்தையையும் தூக்கி வந்துள்ளார்.
மற்றொரு ஆண் குழந்தையையும் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்து வந்துள்ளார். இது குறித்து பஞ்வானி கேட்ட போது, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் அவர்களையும் சுமந்துகொண்டு இப்படித் தான் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ சோமோட்டோ நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு உதவ தயாராக உள்ளதாகவும், குழந்தைகளின் பராமரிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளதுடன், அவரின் விபரங்களை பகிர்ந்து கொள்ளும்படி பஞ்வானியிடம் கேட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement