மதுரை: சட்ட விரோதமாக மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர் – சமூக ஆர்வலர் புகார்

மதுரையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில்,
மதுரை மாநகர் சோலை அழகுபுரம், 3-வது மேட்டு குறுக்கு தெரு பகுதியில் லதா என்ற பெண் வீட்டிலேயே எந்த வித அனுமதியின்றியும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு மாத்திரை, மருந்துகளை கொடுப்பது, ஊசி போடுவது மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதுமாக ஒரு மருத்துவரை போல் நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
image
மேலும் இந்த கிளினிக்கில் இரவு பகலாக பொது மக்களை சிகிச்சை என்ற பெயரில் ஏமாற்றி வருவதாகவும். இவர் சட்டத்திற்கு புறம்பான செயலான கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் சென்டர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவரிடம் வரும் நபர்களுக்கு கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலியல் தன்மையை கண்டறிந்து கூறும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இவர் கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். இவர் இவ்வாறு கிளினிக் போல் தனது வீட்டிலேயே பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்க எந்தவொரு கல்வித் தகுதியும், அரசாங்கத்திடம் எந்தவொரு அனுமதியும் பெறாமல் இருந்து கொண்டு பொது மக்களின் உயிருக்கு மிகவும் ஆபத்து உருவாக்கும் வகையில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
image
மக்களின் உயிரை துச்சமென கருதி, பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் லதா என்ற பெண் நடத்தி வரும் அந்த கிளினிக்கிற்கு சீல் வைத்து, அப்பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிளினிக்கில் பெண்களுக்கு லதா சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ ஆதாரங்களையும் சமர்பித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.