மிகச் சிறப்பான பணிகளுக்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மிசோரம் போலீஸ்

ஐசால்: மிகச் சிறப்பான பணிக்காக பிரிட்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ் இடம் பிடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், காவல் துறையினர் கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு கடத்தல் விலங்குகள் 468-ஐ பறிமுதல் செய்தனர். கடந்த ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மிசோரம் காவல் துறையினரின் இந்த கடமை மற்றும் அர்ப்பணிப்பு பிரிட்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்காக மிகவும் கவுரவமிக்க தங்க பதிப்பு 2022 சான்றிதழ்கள் மிசோரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை மிசோரம் காவல் துறை சார்பில் சிஐடி டிஐஜி பூ லால் ஹூலியானா ஃபனாய் பெற்றுக் கொண்டார்.

‘‘இறுதியில் எங்களின் கடமைமற்றும் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுகளை, எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறோம். மக்களின் ஆதரவும், நம்பிக்கையும், எங்களை மேலும் வலுப்படுத்தி, ஊக்கமளித்துள்ளது. எதிர்காலத்திலும், நாங்கள் சிறப்பாக தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என மிசோரம் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகத் தரத்திலான நடவடிக் கைகளை பதிவு செய்து, அவற்றை கவுரவிப்பதே உலக சாதனை புத்தகம் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.