சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தனியார் பள்ளிகள் இருக்கிறது.
சனிக்கிழமை அரசு பள்ளிகள் செயல்படவில்லை என்ற காரணத்திற்காக தனியார் பள்ளிகளும் செயல்படக்கூடாது என்று அனுமதி மறுப்பது சரியான விஷயமல்ல. சனிக்கிழமை இயங்குகின்ற தனியார் பள்ளிகளுக்கு 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது சரியானது அல்ல. ஏற்கனவே, நடைபெற்றதை போல சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.” என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.