உலகில் பலவிதமான பொழுதுபோக்கு சமூக வலைதளங்கள் நிறைந்துள்ளன. இன்ஸ்டாகிராம்,முகநூல், வாட்சப் போன்றவை பல்வேறு நாடுகளிலும், பல லோக்கல் பொழுது போக்கு சமூக வலைத்தளங்களும் உள்ளன. இவற்றுக்கு இடையே வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வதில் எப்போதும் போட்டி நிலவி கொண்டிருக்கும். அதற்காக தினம் தினம் புது புது ஆப்ஷன்கள் மற்றும் அப்டேட்களை வெளியிடுவது என இருப்பார்கள்.
அப்படி வெளியான புதிய ஆப்ஷன்கள் அவ்வப்போது ட்ரெண்ட் ஆவதும் உண்டு. குறிப்பாக டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டபோது இஸ்டாக்ராமில் அறிமுகமான ரீல்ஸ் ஆப்ஷன் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் அதே விஷயம் முகநூலோடு இணைக்கப்பட்டபோது பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு நிறுவனத்தின் ஐடியாவை பிற நிறுவனங்கள் பல நேரங்களில் அதை போலவே காப்பி அடித்து வெளியிட்டு விடுவார்கள். அந்த சர்ச்சையில் சமீபமாக அடிக்கடி மாட்டும் நிறுவனம் இன்ஸ்டாகிராம். டிக்டாக்கின் வீடியோ ஐடியாவை காப்பி அடித்துதான் ரீல்ஸ் ஆப்ஷனை கொண்டு வந்தது என்று விமர்சனம் எழுந்தது.
தற்போது BeReal என்று சொல்ல கூடிய செயலியின் ஐடியாவை திருடி விட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. BeReal என்பது பேரிஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு பொழுதுபோக்கு சமூக வலைதளம். அது சமீபத்தில் அதன் பயனர்களை எதிர்பார்க்காத நேரத்தில், என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அப்படியே நம்மை கேண்டிட் புகைபடம் எடுத்து எடிட்டிங் ஏதும் செய்யாமல் பதிவேற்றும் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
மெட்டாவின் செயலியான இன்ஸ்டாகிராமும் சமீபத்தில் “join IG candid challenge” என்று அறிவித்து அதன் பயனாளர்களை இரண்டு நிமிடத்திற்குள் கேண்டிட் படங்களை பதிவேற்றுமாறு கேட்டுக் கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சியான பலரும் ட்விட்டரில் இதை பதிவிட்டு இன்ஸ்டாகிராமை விமர்சனம் செய்து வருகின்றனர். BeReal செயலியின் ஐடியாவை இன்ஸ்டாகிராம் எடுத்துக்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால் இது குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து அது இன்டர்நெல் புரோட்டோடைப் என்றும் வெளியில் டெஸ்டிங் செய்வதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து BeReal எந்த விதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
– சுபாஷ் சந்திரபோஸ்