மனிதாபிமானத்தோடு நடக்கும் செயல்கள் தொடர்பான காட்சிகள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் காணக் கிடைத்தாலும் இரக்கமின்றி மனிதர்களை மனிதர்களே சரமாரியாக தாக்கும் வீடியோக்கள் பல தினந்தோறும் கண்ணில் அகப்பட்டு விடுகின்றன.
அதுபோல, எள்ளளவும் கருணையில்லாமல் முதியவர் ஒருவரை கட்டி வைத்து அடித்தேக் கொன்ற சம்பவம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். ஒடிசா மாநிலத்தில் கொராபுத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மலைக் கிராமத்தில்தான் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கும் வீடியோவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து பெண்ணும் இரண்டு ஆண்களும் சரமாரியாக மூங்கில் கம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
ALSO READ:
`சாதி மத மோதல்களுக்கு வாய்ப்பிருக்கு…. தடுக்க தயாரா இருங்க’- டிஜிபி சுற்றறிக்கை
உயிரிழந்தவர் க்ருஷா மணியக்கா என தெரிய வந்திருக்கிறது. குடும்பத்தினருடனான வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக முடிந்திருக்கிறது. அதில் மகன் வீட்டின் கூரையில் க்ருஷா மணியக்கா கிழித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த மணியக்காவின் சகோதரர், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அந்த முதியவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாததால் க்ருஷா மணியக்கா கதறி அழுதிருக்கிறார். அப்போதும் சிறிதளவு இரக்கம் கூட இல்லாமல் அவரை மேலும் மேலும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அதில் துடிதுடித்துப் போய் இறந்திருக்கிறார் மணியக்கா. இதனையடுத்து அவரது உடலை உள்ளூர் மக்களின் உதவியுடன் எரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோவுடன் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடந்த குற்றம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவர் தப்பியோடியதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM