மோடியின் மெகா திட்டம்: நிலக்கரி ஒரம்கட்டுங்க, அணுசக்தி தான் இனி எல்லாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் துறையில் இறங்குவதாக அறிவித்த சில வாரங்களில் 2வது திட்டத்தை நிறுவத் திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மக்கள் பயன்பாடு, தொழிற்துறை என அனைத்து பிரிவுக்கும் போதுமான மின்சாரத்தைத் தயாரிக்க நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையம் மட்டும் போதாது. இதேபோல் இந்தியா Net Zero இலக்கை அடைய சுற்றுச்சூழல்-ஐ பாதிக்கும் நிலக்கரியைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இதற்கு மாறாகத் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க ஊக்குவித்து வருவது மட்டும் அல்லாமல் பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு இதற்கான கதவுகளைத் திறந்துள்ளார்.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வேகத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக Nuclear Power Corp. of India அமைப்பை தாண்டி பொதுத்துறை நிறுவனங்களும் இத்துறையில் இறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆறு ஜிகாவாட் மின்சாரம்

ஆறு ஜிகாவாட் மின்சாரம்

இந்தியா தற்போது ஆறு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுசக்தி தளத்தை உருவாக்கி வருகிறது. இதில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இருந்தாலும் கட்டுமானத்தின் அளவு பொருத்த வரையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக அளவைக் சீனா கொண்டுள்ளதாகச் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

என்டிபிசி லிமிடெட்
 

என்டிபிசி லிமிடெட்

அந்த வரையில் என்டிபிசி லிமிடெட் இந்த மாதத்தின் துவக்கத்தில் தனது முதல் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தளத்தை ஹரியானா மாநிலத்தின் கோரக்பூர்-ல் இரண்டு ரியாக்டர் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

2வது தளம் - மத்திய பிரதேசம்

2வது தளம் – மத்திய பிரதேசம்

தற்போது 2வது தளத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு 700 மெகாவாட் அணுஉலைகள் மூலம் அமைக்க Nuclear Power Corp உடன் என்டிபிசி லிமிடெட் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரையில் NTPC, அணுசக்தி மின்சார நிறுவனம் மற்றும் மத்திய அணுசக்தித் துறை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றம்

2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியமாக்க இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், தூய்மையான மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் படி தான் NTPC திட்டமிட்டு வரும் கோரக்பூர் மற்றும் மத்திய பிரதேச திட்டம்.

அணுசக்தி மின்சாரம்

அணுசக்தி மின்சாரம்

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க மோடி இலக்கு வைத்துள்ளார். தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 70 சதவீத மின்சாரம் நிலக்கரியைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. வெறும் 3 சதவீதம் மட்டுமே அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi’s nuclear power push; NTPC plans for 2nd nuclear power reactors in madhya pradesh

Modi’s nuclear power push; NTPC plans for 2nd nuclear power reactors in Madhya pradesh after Gorakhpur | மோடியின் மெகா திட்டம்: நிலக்கரி ஒரம்கட்டுங்க, அணுசக்தி தான் இனி எல்லாம்..!

Story first published: Wednesday, August 24, 2022, 22:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.