டெல்லி: இந்தியா சர்வதேச அளவில் முன்னணி நகை ஏற்றுமதியாளராக இருந்து வரும் ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கடந்த மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்த ப்ரீ டிரேட் அக்ரிமெண்ட் (free trade agreement)ம் வந்தது.
இதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்தில் இந்தியாவில் நகை ஏற்றுமதியானது UAE-க்கு 42% அதிகரித்துள்ளது.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், மே – ஜுன் காலகட்டத்தில் சாதாரண தங்க நகை ஏற்றுமதி 60% அதிகரித்துள்ளது.
நகை வாங்க போறீங்களா.. இந்த 5 முக்கிய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பலன்
இந்த ப்ரீ டிரேட் அக்ரிமெண்ட் மூலம் இந்திய சந்தையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வேளாண்மை, ரத்தினம் மற்றும் ஆபரணங்கள், மீன், காலணிகள், விளையாட்டு சாதனங்கள், பார்மா பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த 6000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியின்றி இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடும் போட்டி
எதிர்பார்க்கப்பட்டதை போலவே UAE சந்தையில் இந்தியாவின் நகை ஏற்றுமதியானது அதிகரித்துள்ளது. இது முன்னதாக 5% வரியினை செலுத்தி வந்தது.
மே – ஜூன் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான ஏற்றுமதியானது, 5.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்துக்கு முன்பு இருந்ததை விட 17% வளர்ச்சி கண்டுள்ளது. சமீப காலம் வரையில் துருக்கி போன்ற நாடுகளில், நகை ஏற்றுமதியாளர்களுக்கு கடும் போட்டி இருந்து வந்தது. இதன் காரணமாக ஏற்றுமதி சரிவினைக் கண்டது.
எவ்வளவு ஏற்றுமதி?
வர்த்தகத்துறையின் தரவின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான ப்ளைன் கோல்டு ஜுவல்லரி ஏற்றுமதியானது மே மாதத்தில் 62.9% அதிகரித்தும், ஜுன் மாதத்தில் 59.2% அதிகரித்தும், முறையே 135.2 மிலியன் டாலர் மதிப்பிலும் மற்றும் 185 மில்லியன் டாலர் மதிப்பும் உடையது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 27.7% சரிவினைக் கண்டு, 141 மில்லியன் டாலராக இருந்தது.
நல்ல வாய்ப்பு
இது இந்திய நகை ஏற்றுமதியாளர்களுக்கு மிக பயனுள்ளதாக FIEO அமைப்பு தெரிவித்துள்ளது. இது UAE- யினை உலகிற்கு சப்ளை செய்யும் ஒரு மையமாக மாற்றும். இது இந்திய நகை உற்பத்தியாளார்களுக்கு நல்ல வாய்ப்பினையும் கொடுக்கலாம்.
மற்ற ஏற்றுமதி நிலவரம்
நகை ஏற்றுமதி மட்டும் அல்ல, மற்ற ஏற்றுமதியும் நடப்பு ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது , கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அதிகரிப்பினை கண்டுள்ளன. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் UAE – இந்தியா இடையேயான எண்ணெய் அல்லாத வெளி நாட்டு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகரித்து, 25.1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மே மற்றும் ஜூன் மாதங்களில் 16.22% அதிகரித்துள்ளது
gold jewellery exports to UAE up 42% in two months
gold jewellery exports to UAE up 42% in two months/மோடி அரசின் FTA திட்டத்தால் நல்ல பலன்.. நகை ஏற்றுமதியில் சாதனை.. UAE-க்கு 42% அதிகரிப்பு..!