ரயில்வேத்துறை சார்பில் கடந்த ஆண்டு பயணிகளுக்கு 62ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், EMU ரயில்கள் கட்டுமானப் பணியில் இருப்பதாகவும், அவை மெட்ரோ லைனில் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ரயிலில் எஞ்சின் கிடையாது என்றும் இரண்டு அல்லது 3வது பெட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் 5ஜி சேவை அக்டோபரில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.