வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை திறந்து பார்த்ததால் ஆசிரியை ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் மதனபள்ளி நகரில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது.
அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து பார்த்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அவரது மொபைல் போனை ஹேக் செய்திருந்த நபர், தொடர்ச்சியாக அவரது வங்கி கணக்கில் இருந்து பல முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.
REPRESENTATIONAL IMAGE
தொடக்கத்தில் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.80 ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.21 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இணையதள குற்ற பிரிவு பொலிசாருக்கு வரலட்சுமி புகார் அளித்து உள்ளார்.
அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மற்றவர்கள் இது போன்ற லிங்குகளை திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.