பத்திரிகையில்
குறிப்பிட்டதைப்
பார்த்து
மிகவும்
வருத்தப்பட்டேன்
என
இயக்குநர்
மிஷ்கின்
கூறியுள்ளார்.
மிஷ்கின்
இயக்கத்தில்
கடந்த
2014-ம்
ஆண்டு
வெளியாகி
பிளாக்பஸ்டர்
ஹிட்டான
படம்
பிசாசு.
வழக்கமான
பேய்
படங்களைப்
போல்
இல்லாமல்
இதனை
வித்தியாசமாக
கையாண்டிருந்தார்
மிஷ்கின்.
அதனால்
இப்படம்
மக்கள்
மத்தியில்
பிரபலமடைந்தது.
பிசாசு
படத்துக்கு
கிடைத்த
வரவேற்பை
அடுத்து,
தற்போது
8
ஆண்டுகளுக்கு
பின்
அதன்
இரண்டாம்
பாகத்தை
எடுத்துள்ளார்
மிஷ்கின்.
பிசாசு
2
பிசாசு
2
படத்தில்
நடிகை
ஆண்ட்ரியா
ஹீரோயினாக
நடித்துள்ளார்.
இதுதவிர
சந்தோஷ்
பிரதாப்,
பூர்ணா,
அஜ்மல்,
நமீதா
கிருஷ்ணமூர்த்தி
என
மிகப்பெரிய
நட்சத்திர
பட்டாளமே
இப்படத்தில்
நடித்துள்ளது.
இதுதவிர
நடிகர்
விஜய்
சேதுபதியும்
இப்படத்தில்
கெஸ்ட்
ரோல்
ஒன்றில்
நடித்துள்ளார்.
இப்படத்தின்
ஷூட்டிங்
முடிந்து
ரிலீசுக்கு
தயாராக
உள்ளது.
நிர்வாண
காட்சி
நீக்கம்
ராக்ஃபோர்ட்
எண்டர்டெயின்மெண்ட்
நிறுவனம்
தயாரித்துள்ள
இப்படத்திற்கு
கார்த்திக்
ராஜா
இசையமைத்துள்ளார்.
பிசாசு
2
படம்
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்
ஆகிய
மூன்று
மொழிகளில்
வெளியிடப்பட
உள்ளது.
இப்படத்தில்
நடிகை
ஆண்ட்ரியா
15
நிமிட
காட்சி
ஒன்றில்
நிர்வாணமாக
நடித்திருந்தார்.
இந்த
காட்சியை
இயக்குநர்
மிஷ்கின்
நீக்கிவிட்டார்.
விமர்சிப்பவர்கள்
தற்குறிகளா?
இந்த
நிலையில்
சமீபத்தில்
வார
பத்திரிக்கை
ஒன்றுக்கு
பேட்டி
அளித்தார்.
அதில்
என்
படத்தை
விமர்சிப்பவர்கள்
தற்குறிகள்
என
மிஷ்கின்
கூறியதாக
குறிப்பிடப்பட்டது.
இதற்கு
இயக்குனர்
மிஷ்கின்
விளக்கம்
அளித்துள்ளார்.
அதில்,
என்
படத்தை
விமர்சிப்பவர்கள்
தற்குறிகள்
என
ஒரு
பத்திரிகையில்
குறிப்பிட்டதைப்
பார்த்து
மிகவும்
வருத்தப்பட்டேன்,
தலைப்பு
சுவையாக
இருக்க
வேண்டும்
என்பதற்காக
நான்
சொன்னதை
வேறு
மாதிரி
புரிந்து
கொண்டு
செய்தி
போட்டிருக்கிறார்கள்,
நான்
அந்த
அர்த்தத்தில்
சொல்லவில்லை.
விமர்சிப்பது
அனைவரின்
உரிமை
என்
படத்தைப்
பாருங்கள்
படம்
நன்றாக
இருந்தால்
பாராட்டுங்கள்,
படம்
நன்றாக
இல்லையெனில்
கடுமையாக
விமர்சியுங்கள்,
இப்போதல்ல
என்
முதல்
படத்திலிருந்தே
இதைச்
சொல்கிறேன்
விமர்சிப்பது
அனைவரின்
உரிமை,உரிமை
மீறலை
நான்
என்றும்
அனுமதிக்க
மாட்டேன்
என
இயக்குநர்
மிஷ்கின்
விளக்கம்
கொடுத்துள்ளார்.