மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றததால், அவர் நீதிகேட்டு நடை பயணம் மேற்கொள்ள இருந்ததாகவும், முதல் அமைச்சரை சந்திக்க சனிக்கிழமை நேரம் ஒதுக்கிக் கொடுத்திருப்பதால் அவர் பொறுமை காத்து வருவதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை நோக்கி நடை பயணம் செல்லவிருப்பதாக மாணவியின் தாய் செல்வி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவரது வழக்கறிஞர் காசிவிஸ்வ நாதன், அதற்காண காரணத்தையும் விளக்கி உள்ளார்