ஒப்பந்தகாரர்களின் அலட்சியத்தால் பல குளறுபடிகள் நடைபெறுவது தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் கண்ணுக்கு தெரிய வருகிறது. அந்த வகையில் ரயில் செல்லும் தண்டவாளத்திற்கு நடுவில் மின்கம்பத்தை எழுப்பியிருப்பது பற்றி என்றாவது அறிந்திருக்கிறார்கள்.
அப்படியான சிறப்பான சம்பவம்தான் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “சாலையோரங்களில் மின் கம்பங்கள் இருப்பதை கண்டிருப்போம். ஆனால், முதல் முறையாக இப்போதான் ரயில்வே டிராக்கின் நடுவில் மின் கம்பத்தை நட்டு வைத்ததை பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சம்பவம் சாகர் மாவட்டத்தில் உள்ள இஷாவர் ரயில்வே நிலையத்தில்தான் நடந்திருக்கிறது.
सड़क पर बिजली के खंभे के तो कई मामले सामने आ चुके हैं, लेकिन रेल की पटरियों के बीच ऐसा पहली बार दिख रहा है। मामला मध्यप्रदेश के सागर जिले के ईसरवार स्टेशन का है। pic.twitter.com/BXtBYDtuKa
— Avadhesh Akodia (@avadheshjpr) August 23, 2022
பினா-சாகர்-கத்னி ஆகிய பகுதிகளுக்கான மூன்று வழி ரயில்வே பாதை அமைக்கும் போது இந்த மின் கம்பத்தை ரயில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சாலை போடும் போது, கால்வாய் பணியின் போதும் சாலையோரம் இருந்த அடிப்பம்புகள், வாகனங்களோடு சேர்த்து கான்க்ரீட் போட்டது விமர்சனங்களுக்கு வித்திட்டது நினைவுக்கூடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM