144 கிலோ குண்டு இளைஞர் காதலை நிராகரித்த பெண்! சபதம் போட்டு எடையை பாதியாய் குறைத்த ஆச்சரியம்


இளைஞர் ஒருவர் மிகவும் உடல் பருமனாக இருக்கிறார் என்பதற்காக அவர் காதலை பெண்ணொருவர் நிராகரித்ததையடுத்து வைராக்கியம் கொண்டு கடும் முயற்சியின் மூலம் 70 கிலோ எடையை அவர் குறைத்து காட்டியுள்ளார்.

புவி என்ற இளைஞர் ஒராண்டிற்கு முன்னர் 144 எடையுடன் மிகவும் பருமனாக இருந்தார்.
அவரை பலரும் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்து வந்தனர். அந்த நேரத்தில் பெண் ஒருவரின் மீது காதல் கொண்ட புவி தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவரின் உடல் எடையை காரணம் காட்டி அப்பெண் காதலை நிராகரித்தார்.
தெரிந்தவர்கள் மற்றும் பலர் அவரை குண்டு என்று பலமுறை திட்டினாலும் புவியின் மனம் பாதிக்கப்படவில்லை.


ஆனால் அவர் காதலித்த இளம்பெண்ணின் வார்த்தைகள் புவியை ஒரு கடினமான முடிவை எடுக்கத் தள்ளியது.
அதன்படி வைராக்கியத்துடன் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

பின்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றி கொண்ட புவி, உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு என கடுமையாக உழைத்து ஒரே ஆண்டில் 70 கிலோ எடையை குறைத்து அசத்தியுள்ளார்.
புவி ஜிம்மிற்கு சென்ற பிறகு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை டிக் டாக் மூலம் பகிர்ந்துகொண்டார்.

அன்று அவரின் காதல் நிராகரிக்கப்பட்டத்து. ஆனால் இன்று பல பெண்கள் புவியிடம் தங்கள் காதலை ப்ரோபோஸ் செய்கின்றனர்.  

144 கிலோ குண்டு இளைஞர் காதலை நிராகரித்த பெண்! சபதம் போட்டு எடையை பாதியாய் குறைத்த ஆச்சரியம் | Rejected Love By Girl Fat Man Loss Weight

npuvi96 instagram





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.