நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது.
இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.