சொக்லேட், கொக்கோ மற்றும் அமுக்கப்பட்ட பால், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) முதல் அமுலுக்குவரும்வகையில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தவிர, வெண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், சுவையூட்டப்பட்ட பழங்கள், பருப்புவகைகள் , சொக்லேட் மற்றும் கோகோ பொருட்கள் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், முக சவரத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள் (ஷேவிங்கிற்கு பயன்படுத்தப்படும் ஆஃப்டர் ஷேவ), முக அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களில் இடம்பெற்றுள்ளன.தடை செய்யப்பட்ட பொருட்களில் பெண்கள் மற்றும் ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் பல வகையான முன்ஏற்பாட்டு ஆடைகளும் அடங்கும்.
இது தவிர கட்டுமானத் துறை தொடர்பான பல வகையான டைல்ஸ், பைப்புகள், அலுமினியம், கண்ணாடி போன்றவையும் தடை செய்யப்பட்ட இறக்குமதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அச்சுப்பொறிகள், குளிரூட்டிகள், எடையிடும் உபகரணங்கள் ஆகியவை தடைசெய்யப்பட்ட பொருட்களில் அடங்கும்.
கேமரா பாகங்கள், டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், ரைஸ் குக்கர், டோஸ்டர்கள், மின்சார கெட்டில்கள்,; தடை செய்யப்பட்டுள்ளன.