விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது உள்ள பெண் ஒருவர் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக காரில் வந்த அந்த பெண்ணின் நண்பர் கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம்
ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது இவர்களை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முத்துச்செல்வத்தை தாக்கிவிட்டுஅந்த பெண்ணை கடத்திச்சென்றது.
பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சீனிவாசன் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை போலீசார் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.