5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த கையோடு, BSNL-ன் 10000 டவர் விற்பனை.. யாருக்கு லாபம்..?!

இந்திய டெலிகாம் துறையை மொத்தமாக மாற்றியமைக்கப் போகும் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த நிலையில் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சேவை விரிவாக்க பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு தனது முக்கியமான NMP திட்டத்தின் வாயிலாகப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 10000 டெலிகாம் டவர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. வேகமாக அதிகரித்து வரும் டெலிகாம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க இந்த 10000 டவர்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இதனால் இந்த டவர்களைக் கைப்பற்றுவதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியில் பெரும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10000 டெலிகாம் டவர்களை

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டத்தின் ஒரு பகுதியாக BSNL என்று செல்லமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் 10000 டெலிகாம் டவர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த டவர்கள் வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.

 4000 கோடி ரூபாய்

4000 கோடி ரூபாய்

அரசு நிறுவனமான BSNL நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் 10000 டவர்களின் மதிப்பு 4000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த விற்பனையில் KPMG நிறுவனம் நிர்வாக ஆலோசகராக விளங்குகிறது, மதிப்பீடு முதல் விற்பனை வரையில் இந்நிறுவனம் பணியாற்ற உள்ளது.

BSNL
 

BSNL

இந்தியா முழுவதும் தரமான டெலிகாம் சேவை அளிக்கும் BSNL மும்பை, டெல்லியில் தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டெலிகாம் டவர்களை வைத்துள்ளது. இந்தியா முழுவதும் BSNL சுமார் 68000 டவர்களை வைத்துள்ள நிலையில் தற்போது 3ஆம் தரப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் உடன் co-location ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள 10000 டவர்களை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

 Data Infrastructure Trust நிறுவனம்

Data Infrastructure Trust நிறுவனம்

இந்த 10000 டெலிகாம் டவர்களை ப்ரூக்பீல்டு குழுமத்தின் Data Infrastructure Trust நிறுவனம் வாங்கப் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Data Infrastructure Trust நிறுவனம் 2019ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆதிக்கம் செலுத்தும் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.30 லட்சம் டவர்களை வாங்கியிருந்தது.

4ஜி அல்லது 5ஜி சேவை

4ஜி அல்லது 5ஜி சேவை

BSNL நிறுவனத்தின் டவர் போர்ட்போலியோவில் 70 சதவீத டவர்கள் fiberised செய்யப்பட்டு உள்ளது, இதனால் இந்த டவர்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் 4ஜி அல்லது 5ஜி சேவையை வாங்கி அடுத்த நாளே 5ஜி டெலிகாம் சேவையை அளிக்க முடியும் என்பதால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட வாங்க திட்டமிடலாம்.

NMP திட்டம்

NMP திட்டம்

NMP திட்டத்தின் கீழ் BSNL நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் தனது மொத்த 68,000 டெலிகாம் டவர்களில் சுமார் 13,567 டவர்களை விற்க வேண்டும். இதேபோல் டெல்லி மற்றும் மும்பையில் இயங்கும் MTNL 1350 டவர்களை விற்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. BSNL மற்றும் MTNL இணைந்த 14,917 டவர்களை விற்பனை செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

BSNL to sell 10,000 towers; Modi govt’s national monetisation pipeline target kicks in

BSNL to sell 10,000 towers; Modi govt’s national monetisation pipeline target kicks in 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த கையோடு, BSNL-ன் 10000 டவர் விற்பனை.. யாருக்கு லாபம்..?!

Story first published: Wednesday, August 24, 2022, 10:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.