சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மலிவான விலையில் உற்பத்தி செய்ய, கூட்டணியிலோ அல்லது முதலீட்டின் வாயிலாகவோ கடந்த 10 – 15 வருடத்தில் சீனாவில் சிறிதும் பெரிதுமாக உற்பத்தி தளத்தை அமைத்து லாபம் பார்த்து வந்தது.
ஆனால் தற்போது இதே சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி இனி சீனா வேண்டாம் என்று உற்பத்தி தளத்தை வேறு நாடுகளுக்கு மாற்றப் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முடிவெடுத்து வருகிறது.
உண்மையில் இன்னொரு சீனா-வை உருவாக்க முடியுமா..?
சீனா வேண்டாம்ப்பா.. உலக நாடுகளின் முடிவால் புதிய பிரச்சனை..!
இன்னொரு சீனா
இன்னொரு சீனா-வை உருவாக்குவது, உலகின் 2வது பெரிய உற்பத்தி தளத்தை உருவாக்குவது, சீனாவுக்குப் பதிலாக இன்னொரு நாட்டை உற்பத்தியில் பிராதானப்படுத்துவது என்பதெல்லாம் பேசுவதற்கு எல்லாம் இனிமையாக இருக்கும். ஆனால் உண்மையில் சாத்தியம் இல்லை.
உற்பத்தி தொழிற்சாலை
அனைத்து துறைக்குமான உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது இமாலய பணியாக ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் உள்கட்டுமானம், சாலை கட்டமைப்பு, போக்குவரத்துக் கட்டமைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி தளம் ஆகியவை கடிகாரம் போல் பல வருடங்களுக்கு எவ்விதமான தங்கு தடையுமின்றி இயங்க வேண்டும்.
சப்ளை செயின்
இதேபோல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒரு நாட்டில் இருந்து உலகம் முழுக்கக் கொண்டு செல்ல சப்ளை செயின் மற்றும் சப்ளையர்களை உருவாக்க வேண்டும் என்பது இன்று, நாளை, அடுத்த வருடம் செய்யக் கூடியது இல்லை, இதற்குப் பல ஆண்டுகள் தேவை.
20 வருட உழைப்பு
20 வருடங்களுக்கு அதிகமாகச் சீன சர்வதேச உற்பத்தியாளர்களுக்குச் சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறைக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும், வசதிகளையும் கொடுத்துப் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தது என்றால் மறுக்க முடியாத உண்மை. சீனாவில் தற்போது அனைத்து துறைக்குமான உற்பத்தி தளத்தை வைத்துள்ளது.
இதுதான் சீனா.. எப்போதும் ரெடி
உதாரணமாகத் தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படாத பொருட்களுக்கான உற்பத்தி தளத்தையும் மெகா சைஸ்-ல் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூளையில் இருந்து உற்பத்திக்கான ஆர்டர் வந்தாலும் அதை ஏற்றுச் செய்ய வேண்டும் என்பதற்காக வர்த்தகம் ஆகாத துறைக்கும் உற்பத்தி தளத்தை வைத்துள்ளது.
சாலை, போக்குவரத்து
இப்படித் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி தளத்திற்கு விரைவாகக் கொண்ட செல்ல தேவையான சாலை, போக்குவரத்து, சப்ளை செயின் ஆகிய அனைத்து கட்டமைப்புகளையும் சீன அரசு நிறுவனங்கள் சிறப்பாகச் செய்துள்ளது.
ஏற்ற இறக்கம், நிறை குறை
சீன பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கம், நிறை குறைகள் இருந்தாலும், சர்வதேச பொருளாதாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அடுத்த 10 -15 வருடத்திற்கு எவ்விதமான மாற்றத்தையும் காணாது என்பது தான் உண்மை. தற்போது சீனாவுக்கு மாற்று உற்பத்தி தளமாக அமெரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா நாடுகளைக் குறிப்பிடுகின்றனர்.
Made In China
ஒரு காலத்தில் Made In China என்றாலே கிண்டல் செய்யும் உலக நாடுகள் தற்போது, உலகின் உற்பத்தி சந்தையை ஆட்சி செய்து வருகிறது. சீனாவின் பலம் உற்பத்தியில் மட்டும் அல்ல தொழில்நுட்ப சேவைகள், நிதி சேவைகள், தொழில்நுட்ப பொருட்கள் உருவாக்குதல் மற்றும் இந்த மூன்றையும் தொடர்ந்து தரத்திலும், திறனிலும் மேம்படுத்துவதன் மூலம் தான் ஆதிக்கம் செலுத்த முடிந்துள்ளது.
இப்ப சொல்லுங்க இன்னொரு சீனாவை உருவாக்க முடியுமா..?
Replacing China isn’t all that easy; For two decades Beijing pampered global manufacturers
Replacing China isn’t all that easy; For two decades Beijing pampered global manufacturers அடுத்தச் சீனா யார்.. உண்மையில் இன்னொரு சீனா-வை உருவாக்க முடியுமா..?