அமேசான் நிறுவனம் அதன் ஹெல்த்கேர் சேவை டிசம்பர் 31-க்குள் மூடப்படும் என அறிவித்துள்ளது.
அமேசான் ஹெல்த் சர்வீஸின் மூத்த துணைத் தலைவர் நீல் லிண்ட்சே ஊழியர்கள் அனுப்பிய மெயில், அமேசான் கேர் சேவைகளை டிசம்பருக்குள் முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக தொடர்ந்து வந்த சேவையை, தற்போது முடித்து கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குக்கர் விற்பனை செய்தது தப்பா? அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!
சுகாதார சேவைகள்
சியாட்டிலை தளமாக கொண்ட அமேசானின் வாஷிங்டன் மாநில ஊழியர்களுக்காக, 2019ல் இந்த சுகாதார சேவைகள் தொடங்கப்பட்டது. இது 50 மாநில ஊழியர்களுக்கு கிடைக்கும் விதமாக செய்வதற்கு முன்பு, வாஷிங்டன் ஊழியர்கள் சோதனை பயனர்களாக பணியாற்றினர்.
தனியார் ஊழியர்களுக்கும் சேவை
இதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே பிப்ரவரியில் கூடுதலாக 20 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள தனியார் ஊழியர்களுக்கு இந்த சேவையினை வழங்க தொடங்கியது. ஆனால் அமேசானின் இந்த திடீர் முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
என்ன செய்யும்?
இந்த சேவையின் மூலம் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் தேவையான பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைக்கிறது. எனினும் இதற்கு சரியான இருப்பிடங்கள் என்பது இல்லை. எனினும் தடுப்பூசி, காய்ச்சல் பரிசோதனை போன்ற விஷயங்களுக்கு நேரில் சேவைகளை வழங்குகிறது.
நீண்டகால தீர்வு அல்ல
இது நல்ல திட்டம் தான் என்றாலும் ,அமேசான் கேர் அதன் வாடிக்கையாளர்களுக்கு, சரியான நீண்டகால தீர்வு அல்ல என்று நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று லிண்ட்சே தெரிவித்துள்ளார். இது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை செய்ய போதுமான அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவசியம் குறைவு தான்
கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த ஊழியர்களுக்கு சேவை தேவைப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவசியம் இல்லை என்ற நிலையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக மருத்துவமனைகளை அணுகத் தொடங்கியிருக்கலாம். இதனால் அமேசானின் ஹெல்கேர் சேவையில் சரிவு இருக்கலாம். அமேசானின் இந்த முடிவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஒரு தரப்பு கூறுகின்றது.
Amazon plans to shut down its healthcare services by December 31: check details
Amazon plans to shut down its healthcare services by December 31: check details/அமேசான் எடுத்த அதிரடி முடிவு.. டிசம்பர் 31-க்குள் இந்த சேவை நிறுத்தம்.. ஏன்?