நாட்டில் வளர்ந்து வரும் -பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனிய தொழில் வளர்ச்சிக்கு மத்தியில், அவாடா குழுமம் ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவிலான முதலீடு செய்யவுள்ளது.
இந்த முதலீடானது ராஜஸ்தானில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கவுள்ளதாகவும், இதற்காக 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ராஜஸ்தானின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது.
Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!
வேலை வாய்ப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் இந்த ஆலை அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலையில் நேரடியாக 3500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்று எரிபொருள்
ஃபவுண்டரிகள், கண்ணாடி மற்றும் இரும்பு தயாரிப்பாளர்களுக்கு தேவைப்படும் உயர் வெப்ப தொழில்களுக்கு, இந்த பசுமை எரிபொருள் மாற்றாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகிறது. ஆக அவர்களுக்கு எதிர்காலத்தில் தேவையான சப்ளையை இதன் மூலம் செய்ய முடியும். இதனால் சுற்றுசூழலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் இலக்கு
இந்தியா 2030ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. படிம எரிபொருள்களுக்கு மாற்றாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா கருதப்படுகிறது. புதுபிக்கதக்க மின்சாரத்தை பயன்படுத்தி இந்த எரிபொருட்களை உற்பத்தி செய்வதால், இது பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா என அழைக்கப்படுகிறது.
முக்கிய தேவை
இந்தியாவின் நிலையான எரிசக்தி பாதுகாப்புக்கு இவைகள் முக்கியத் தேவைகளாக உள்ளன. இது படிம எரிபொருள்களில் இருந்து, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியாவுக்கு மாற இந்தியாவுக்கு உதவும். இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆக நாட்டின் முக்கியத் தேவைகளாக இருக்கும் இந்த எரிபொருட்களை உற்பத்தி செய்வது அவாடா குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கும் என நிறுவனம் நினைக்கிறது.
Avaada proposes Rs.40,000 crore green ammonia plant in Rajasthan: may create thousands of job
Avaada proposes Rs.40,000 crore green ammonia plant in Rajasthan: may create thousands of job/அவாடா குழுமத்தின் ரூ.40,000 கோடி முதலீட்டு திட்டம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?