இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் 2022 ஆசிய வெற்றிக்கிண்ண இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி இம்மாதம் 27ஆம் திதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. அதன் மறுநாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆசிய வெற்றிக்கிண்ண போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சென்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று பெங்களூரில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணமானது.
முன்னதாக அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்திய அணியின் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணனை இடைக்கால பயிற்சியாளராக நியமனம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
டிராவிட்டுக்கு கொரோனா பரிசோதனயில் நெகட்டிவ் வரும் வரை வி.வி.எஸ் லட்சுமணன் பயிற்சியாளராக தொடர்வார். மீண்டும் பரிசோதிக்கும் போது நெகட்டிவ் வரும் பட்சத்தில் டிராவிட் அணியோடு இணைந்துகொள்வார்.