ஆசைகள்… ஆசைகளை வளர்த்துக்கொள்வதும், இதுலதான் ஆசைப்படணும், இதுக்கு தான் ஆசைப்படணும், இந்த வயசுல தான் ஆசைப்படணும்னு எந்தவொரு எல்லைகோடுமே கிடையாது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகிட்ட கூட உன்னோட கடைசி ஆசை என்னனு கேப்பாங்க.
அதுமட்டுமில்லாம நமக்கு நெருக்கமானவங்க, நம்மள புடிச்சவங்கனு பலபேர் நம்மளோட ஆசை என்னனு நமக்கு தெரியாமலே தெரிஞ்சிக்கிட்டு நம்மள சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. அப்போ நாம உணர்ந்த அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் கூட கிடைக்காது.
என்னதான் ஹோட்டல்ல சாப்டாலும், நாம சமைச்ச சாப்பாடு மாதிரி வருமானு, நமக்கு தோணுமில்ல. அந்த மாதிரி தான் நம்மளோட ஆசை என்னனு நமக்கு நாமே தனியா ஒரு லிஸ்ட் போட்டு நிறைவேத்திக்கிறதும்… அப்படி நாம எழுதிவச்ச ஆசைகளின் லிஸ்ட்ட தான் இப்போ பக்கெட் லிஸ்ட்னு(Bucket list) சொல்லிட்டு இருக்கோம். அதுல சின்ன ஆசை, பெரிய ஆசைனு எதுவுமே கெடையாது. ஆசைப்பட்றதுக்கு எதுனா வரையறை இருக்கா என்ன? பக்கெட் லிஸ்ட்ட கான்செப்ட்டா வச்சி, ஹாலிவுட்ல `தி பக்கெட் லிஸ்ட்(The Bucket list), தமிழ்ல `கே.டி என்கிற கருப்புதுரை’-னு படங்கள் கூட வந்திருக்கு.
இதுலயும் சிலபேர், இப்படியும் ஆசைப்படுவாங்களானு நம்மள வியக்க வைக்கிறதுமுண்டு. அப்படி தான், ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த பெண்மணியோட விசித்திரமான ஆசை ஒன்னு, அவங்களோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு நிறைவேறியிருக்கு. அவங்களோட பெயர் ஜீன் பிக்கென்டன்(Jean Bickenton). அவங்களுக்கு இப்போ சரியா 100 வயசு. இவங்க பல தசாப்தங்களாக இராணுவ செவிலியராக பணிபுரிஞ்சிருக்காங்க. இதுக்கிடையில இவங்களோட, விசித்திரமான அந்த ஆசை என்னனு பாத்தா, அவங்க பலமுறை ஜெயிலுக்கு போகணும்னு சொல்லிருக்காங்களாம்.
இந்த விஷயம் எப்டியோ விக்டோரியா காவல்துறைக்கும் தெரியவர, காவலர்களும் கரெக்ட்டா ஜீன் பிக்கென்டனோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு, அவங்க தங்கியிருந்த முதியோர் இல்லத்துக்கு சென்று கைல விலங்கு மாட்டி, கைது பண்ணி சர்ப்ரைஸ் குடுத்திருக்காங்க. விக்டோரியா காவல்துறை இதை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்காங்க. இத படிக்கும்போதே ஆச்சர்யமா பாக்ற உங்கள மாதிரியே, சமூக வலைதளங்கள்ல நெட்டிசன்களும் ஆச்சர்யமா தங்களோட கருத்துக்களை இதற்கு பதிவிட்டுட்டு வராங்க. இதைப்பற்றி விக்டோரியா காவல்துறை, “இதுபோன்ற ஒரு கைது செய்ததில் நாங்கள் மகிழ்சியாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறது.
இந்த மாதிரி நீங்களும் உங்களோட ஆசைகள லிஸ்ட் போட்டு வைங்க. யாருக்கும் தெரியும் யாருக்கு யார் எப்போ சர்ப்ரைஸ் குடுப்பாங்கனு..!