வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்-ரஷ்யா போர் துவங்கி, ஆறு மாதங்கள் முடிந்து உள்ள நிலையில், நாட்டின் சுதந்திர தினத்தை உக்ரைன் மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் கொண்டாடினர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. பிப்., 24ம் தேதி ரஷ்யப் படைகளின் தாக்குதல் துவங்கியது. போர் துவங்கி, நேற்றுடன் ஆறு மாதங்கள் முடிகின்றன.இந்நிலையில், உக்ரைனின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 1991ல் சோவியத் யூனியனில் இருந்து தனியாகப் பிரிந்தது உக்ரைன்.
இதையடுத்து, ஆக., 24ம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மூளையாகக் கருதப்படும் அவருடைய நெருங்கிய கூட்டாளி அலெக்சாண்டர் துகினின் மகள், மாஸ்கோவில் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதற்கு உக்ரைனே காரணம் என்று கூறி வரும் ரஷ்யா, போரை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, உக்ரைன் மக்கள் சுதந்திர தினத்தை வீடுகளிலேயே கொண்டாடினர்.
ரூ.24 ஆயிரம் கோடி உதவி
ரஷ்யப் படைகளை
எதிர்த்து போரிடும் உக்ரைன், ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கு உதவும்
வகையில், 24 ஆயிரம் கோடி ரூபாய் உதவியை வழங்குவதாக அமெரிக்கா
அறிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று
கூறியதாவது:ரஷ்யா தொடர்ந்துள்ள போரால் ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டுள்ளதால், உக்ரைனுக்கு இந்த சுதந்திர தினம் மகிழ்ச்சியாக
இருக்காது.ஆனால், ரஷ்யப் படைகளுக்கு எதிராக, ஆறு மாதங்களாக கடும் சவால்
விடுத்து வருவது குறித்து உக்ரைன் ராணுவம், அந்த நாட்டு மக்கள் பெருமைப்பட
வேண்டும்.ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில், அதற்கு,
24 ஆயிரம் கோடி ரூபாய் உதவி அனுப்பப்படும். இந்த நிதி உதவியில் இருந்து
தனக்கு தேவையான ஆயுதங்களை உக்ரைன் வாங்க முடியும்.இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement