உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து, உடனடியாக ரஷ்யப் படைகள் உக்ரைனிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைக் கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்துள்ளார்.
உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்குத் திரும்பவேண்டும் என்று கூறியுள்ள Cassis, ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா முதலான பகுதிகளிலிருந்தும் அந்நாடு வெளியேற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நடுநிலை நாடு என அறியப்படும் சுவிட்சர்லாந்து, முதலில் ரஷ்ய ஊடுருவல் குறித்து முதலில் கருத்துத் தெரிவிக்கத் தயங்கிய நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ரஷ்யா மீது தடைகள் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© Ti-press