உக்ரைன் அழகிக்காக தன் மனைவியைக் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர்.
இப்போது புதுக்காதலியுடன் உக்ரைனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியை, சந்தித்து பத்தே நாட்கள் ஆன காதலிக்காக கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர்.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். அவருக்கு Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), அவரது மனைவியான லோர்னா (Lorna) மற்றும் தம்பதியருடைய இரண்டு பிள்ளைகள் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார் டோனி.
Credit: Louis Wood
தற்போது வேலை வெட்டி எதுவும் இல்லாமல் இருக்கும் டோனி, சோபியாவுடன் உக்ரைனுக்குச் செல்ல இருக்கிறாராம்.
உக்ரைனில் நடப்பதை யூடியூபிலும், இன்ஸ்டாகிராமிலும் ஆவணப்படுத்த இருக்கிறோம் என்று கூறும் டோனி, போர் நீண்டுகொண்டே செல்லச் செல்ல, ஏராளமானோர் உயிரிழக்கப் போகிறார்கள், நாங்கள் செய்யும் உதவியால் அதில் கொஞ்சமாவது நிறுத்தப்படலாம் என்கிறார்.
ஒருவேளை நூற்றுக்கணக்கான உயிர்களை என்னால் காப்பாற்ற முடியலாம் என்று கூறும் டோனி, அப்படி இல்லையென்றால், என்னால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தால் கூட, அதுவும் என்னைப் பொருத்தவரை பெரிய விடயம்தான் என்கிறார் அவர்.
ஆக, சீக்கிரத்தில் டோனியும் சோபியாவும் உக்ரைனுக்குச் செல்ல இருக்கிறார்களாம்!
Credit: NB PRESS LTD