எனக்கு பெயில்..உனக்கு ஜெயில்; கெத்தா காலரை தூக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவில் தலைமை பதவி பஞ்சாயத்து உச்சத்தில் உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நீதிமன்ற கதவுகளை தட்டிய நிலையில், அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு முதற்கட்டமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு தனி ஆவர்த்தனம் செய்யலாம் என திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஆரம்ப நிலையிலேயே சம்மட்டி அடியை கொடுத்துள்ளது.

இதனால் அதிமுக விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை செல்லாமல் போக செய்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வாதத்தில் தனி நீதிபதி ஏற்கனவே அளித்த தீர்ப்பில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென ஓபிஎஸ் கேட்காமலேயே தீர்ப்பளித்தது அசாதாரணமானது எனவும் கூறி முறையிட்டனர்.

அதே சமயம் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கில் தன் கருத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று, ஓ.பி.எஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி ஓபிஎஸ், ‘அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதல் தொண்டர்கள் தான் தலைவர்களை தேர்வு செய்து வருகின்றனர். எம்ஜிஆரும் தொண்டர்கள் வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டார்.

இதையே தான் ஜெயலலிதா பின்பற்றினார். எனவே, அதிமுகவில் தொண்டர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறதே தவிர பொதுக்குழுவுக்கு இல்லை என்று நெத்தியடியாக தனது வாதத்தை முன்வைத்தார்.

இப்படியாக இருதரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையே அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில்

உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நம்பிக்கையாக வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவலை ஓ.பி.எஸ்சிடம் அவரது ஆதரவாளர்கள் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.

சமத்தாக வலம்வரும் ஜூலி : டூவீலரில் ஓனருடன் ஜாலி பயணம்!

அதற்கு ஓபிஎஸ் சற்று கூலாக, ‘கேஸ் போட்டா போடட்டும். இதுக்காவது பெயில் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம், கொடநாடு கொலை கொள்ளை, டெண்டர் முறைகேடு வழக்கு என்று வரிசையா இருக்கு. அதுக்கெல்லாம் பெயிலே இல்லை.. ஜெயிலு தான் என்று கூறி காலரை தூக்கிவிட்டு சிரித்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.