தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
முதலீட்டாளர்கள் இன்று ஜாக்சன் ஹோல் சிம்பேசியத்தியில் நடக்கவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிண்றனர். இதில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை கட்டுக்குள் வைக்கும் விதமாக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வாங்க திட்டமா.. இன்று விலை எப்படியிருக்கு தெரியுமா?
டாலரின் மதிப்பு வீழ்ச்சி
தொடர்ந்து டாலரின் மதிப்பு அழுத்தத்தில் காணப்படும் நிலையில்,மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர சந்தையும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பணவீக்கம் என்னவாகும்?
மத்திய வங்கிக்கு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தினையும் தக்க வைக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதற்கிடையில் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியும் நடக்கலாம்
ஒரு பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது டாலர் மதிப்பினை ஊக்குவிக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். முதலீட்டினை குறைக்கலாம். இதனால் தங்கம் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மந்த நிலையில் பொருளாதாரம்
கடந்த ஜூலை மாதமே அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது, அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் சரிவிலேயே காணப்படுவதை உறுதி படுத்துகிறது. ஆக இது தொடரும் பட்சத்தில் அது ரெசசனுக்கு வழிவகுக்கலாம். இது தங்கம் விலை ஏற்றம் காணவும் காரணமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 7.05 டாலர்கள் அதிகரித்து, 1768.55 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் 1.11% அதிகரித்து, 19.115 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 196 ரூபாய் அதிகரித்து, 51,629 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 527 ரூபாய் அதிகரித்து, 55,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், இது மீடியம் டெர்மில் மீண்டும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4830 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 38,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 5232 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,856 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 250 ரூபாய் அதிகரித்து, 52,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 61.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 611 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,300
மும்பை – ரூ.47,500
டெல்லி – ரூ.47,650
பெங்களூர் – ரூ.47,550
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,300
gold price on 25th August 2022: gold prices higher as US dollar softens
gold price on 25th August 2022: gold prices higher as US dollar softens/ ஏமாற்றம் அளிக்கும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?