கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும் பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், மண்ணெண்ணை விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் மண்ணெண்ணை கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை கடலட்டை வளர்ப்பு தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால், அவர்களைப் பயன்டுத்தி, உடனடித் தேவையாக எமக்கு இருக்கின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும எனவும கற்றொழல் அமைச்சர் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சில் 24.08.2022 நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.