கணவருடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தூதர்…சுற்றிவளைத்த மியான்மர் ராணுவ அதிகாரிகள்


மியான்மருக்கான பிரித்தானியாவின் முன்னாள் தூதர் கைது.


ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு.

மியான்மருக்கான பிரித்தானியாவின் முன்னாள் தூதர் விக்கி போமன் மற்றும் அவரது கணவரை மியான்மர் ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் விக்கி போமன் மியான்மரின் தூதராக 2002 -2006 வரை பணியாற்றினார், மேலும் அவர் பர்மிய கலைஞரும் முன்னாள் அரசியல் கைதியுமான ஹெட்டீன் லின் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

விக்கி போமன் யாங்கூன் அல்லாத வேறு ஒரு நகரத்தின் முகவரியில் தங்கியிருந்ததன் மூலம் விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், மேலும் அவர் கணவர் இந்த நடவடிக்கைகளுக்கு உதவியதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவருடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தூதர்...சுற்றிவளைத்த மியான்மர் ராணுவ அதிகாரிகள் | Uk Ex Ambassador Vicky Bowman Arrested In Myanmar

விக்கி போமன் மற்றும் அவரது கணவர் ஹெட்டீன் லின் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் தற்போது இன்செயின் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விக்கி போமனுக்கு பிரித்தானிய தூதரகம் அவருக்கு தூதரக உதவிகளை வழங்கி வருகிறது.

கணவருடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தூதர்...சுற்றிவளைத்த மியான்மர் ராணுவ அதிகாரிகள் | Uk Ex Ambassador Vicky Bowman Arrested In MyanmarThe Guardian

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புடின் அதிரடி உத்தரவு!

மியான்மரில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையின் ஐந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த கைது இடம்பெற்றுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.