கனடாவில் இந்த வார இறுதியில் Tamil Fest 2022 விழா கொண்டாடப்பட உள்ளது.
இலங்கை உணவுகளை ஒரு கை பார்ப்பதுடன், இந்திய, இலங்கை கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம்.
கனடாவின் Scarboroughவில் சனிக்கிழமை மதியம் முதல் இரவு 11.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடைபெற உள்ள இந்த விழாவில், இதற்கு முன், 2019ஆம் ஆண்டு 250,000 பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை முறியடிக்கும் அளவில் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் பிறந்தவரான நிமாஸ் கரீம், விழாவில் தங்கள் Bhai Biryani கடையின் சிறப்பு பிரியாணியையும் ஒரு கை பார்க்கலாம் உண்டு என்கிறார்.
image – DAN PEARCE/METROLAND
சுமார் 10 உள்ளூர் உணவகங்கள் வகை வகையாக உணவுகளை விழாவுக்குக் கொண்டுவர உள்ளன.
வயிற்றுக்கு மட்டுமின்றி, காதுக்கும் விருந்து உண்டு. இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பிரபல பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார்கள். கனடாவில் கிடைக்காத பலவகை பழங்கள் முதல் புடவைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த விழாவில்தான் இலங்கைத் தமிழரான துரைரத்னம் (Thushy R. Thurairatnam) தனது மேட் இன் முல்லைத்தீவு புடவைகள் முதலான ஆடைகளை அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த கோடையை வழியனுப்ப இதுதான் சரியான வழி என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Abissheka Lloydson
image – twitter
300 பேர் கலைநிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் Abissheka.
இரண்டு ஆண்டுகளாக Tamil Fest நடத்தப்படாததால், இம்முறை அதை பெரிதாக நடத்த விரும்புகிறோம் என்கிறார் அவர்.
image – blogto.com