கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலணிகளை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலையிலிருந்து நேற்று மாலை, வேலை முடிந்தபின் 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேணும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர.
இதில் படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேன் டிரைவர் உட்பட மற்ற 4 பேர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.