தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு வசதிகள் கிடைத்து வருகிறது என்பதும் மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே.
தொழில்நுட்பம் காரணமாக பல வேலைகளை தற்போது இலகுவாக செய்ய முடிகிறது என்பதும் பல வேலைகள் தற்போது மனிதர்களுக்கு பதில் இயந்திரமே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது சமையலறையில் வேலையை எளிதாக்கும் வகையில் தோசை சுடும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வளர்ச்சிகள் தற்போது உள்ளன என்பதும் இன்னும் எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆச்சரியத்தை தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோசை சுடும் இயந்திரம்
ரொட்டி தயாரிப்பது முதல் பல்வேறு தொழில் நுட்பம் சமையலறைக்குள் புகுந்து விட்டது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தோசை சுடும் இயந்திரம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிண்டர் போல் இருக்கும் இந்த இயந்திரத்தில் ஒரு பக்கத்தில் தோசை மாவு ஊற்றினால், மறுபக்கம் சுடச்சுட முறுகலான தோசை வெளியே வருகிறது. இந்த இயந்திரத்தின் வீடியோவை சமந்தா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
தடிமன் – எண்ணிக்கை
இந்த வீடியோவை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்தப்பெண் இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் தோசை மாவை ஊற்றுகிறார். அதன்பிறகு தோசையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அளவை தேர்ந்தெடுக்கிறார். மேலும் எத்தனை தோசை வேண்டும் என்ற எண்ணிக்கையையும் செட் செய்த பின் தானாகவே குறிப்பிட்ட தடிமனில் எத்தனை தோசை வேண்டுமோ அத்தனை தோசையையும் அந்த இயந்திரம் தருகிறது.
நெட்டிசன்களின் ரியாக்சன்
இந்த வீடியோ வெளியாகி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதும் நூற்றுக்கணக்கான நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நெட்டிசன் இந்த இயந்திரத்தில் ஊத்தப்பம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். இன்னொருவரோ தோசை திடீரென இயந்திரத்தில் சிக்கி விட்டால் என்ன செய்வது? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
தென்னிந்திய உணவு
தோசை என்பது இந்தியாவில் உள்ள ஒரு பொதுவான உணவாக தற்போது மாறிவிட்டது. தென்னிந்திய உணவாக இருந்தாலும் தற்போது மும்பை உள்பட பல வட மாநிலங்களிலும் தோசை சர்வசாதாரணமாக அனைத்து உணவகத்திலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பொதுமக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் தோசை சுட சுட தோசைக்கல்லில் சுட்டு சாப்பிட்டு வரும் நிலையில் தற்போது இயந்திரத்தின் மூலம் சுட்டு சாப்பிடும் நாள் வந்துவிட்டது.
This Gadget Can ‘Print’ Dosas for You and We are at the Peak of Humanity
This Gadget Can ‘Print’ Dosas for You and We are at the Peak of Humanity | சுட சுட தோசை தானாக சுடும் இயந்திரம்.. எங்கே செல்கிறது நாடு?