ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் என்றாலே பொதுவாக அதிக சம்பளம் வாங்குவார்கள் என்ற ஒரு எண்ணம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் ஐடி துறையில் உள்ள சிஇஓக்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது.
ஐடி துறையின் சிஇஓக்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில் அவ்வாறு அதிக சம்பளம் வாங்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்களின் சம்பளம் குறித்து பார்ப்போம்.
Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!
HCL Tech சிஇஓ விஜயகுமார்
HCL Tech சிஇஓ விஜயகுமார் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ ஆவார். இவர் ஆண்டுக்கு சுமார் ரூ.130 கோடி சம்பளம் பெறுவதாக தெரிகிறது. விஜயகுமார் 2021ஆம் ஆண்டில் ரூ. 123.13 கோடி சம்பளம் பெற்றார். அடிப்படை சம்பளம், சலுகைகள் மற்றும் பிற நன்மைகள் ஆகியவைகளை சேர்த்தால் இவருடைய மொத்த சம்பளம் ரூ.130 கோடியை நெருங்குகிறது.
விப்ரோவின் சிஇஓ தியரி டெலாபோர்ட்
2021-22 ஆம் ஆண்டில் விப்ரோவின் சிஇஓ தியரி டெலாபோர்ட், ஆண்டு ஊதியமாக சுமார் ரூ. 80 கோடி பெற்றார். அவர் ஜூலை 2020ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதல் ஒன்பது மாதங்களில், அவரது ஊதியம் ரூ 64 கோடியாக இருந்த நிலையில் பின்னர் அவரது ஊதியம் ரூ.80 கோடியாக உயர்ந்தது.
இன்ஃபோசிஸ் சிஇஓ சலீல் பரேக்
2021-22 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் சிஇஓ சலீல் பரேக் மொத்த ஊதியமாக ரூ.71.02 கோடி பெற்றார். இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் பரேக்கின் பதவிக் காலத்தை 2027ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக் மஹிந்திரா சிஇஓ சி.பி குர்னானி
டெக் மஹிந்திராவின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான சி பி குர்னானி 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 63.4 கோடி ஊதியத்தைப் பெற்றார். இந்த ஆண்டு மட்டும் அவருடைய சம்பளம் ஆண்டு 189 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிஇஓ எம்டி ராஜேஷ் கோபிநாதன்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிஇஓ மற்றும் எம்டி ராஜேஷ் கோபிநாதன் 2021-22 ஆம் ஆண்டில் .ரூ.25.75 கோடி பெற்றுள்ளார். இந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி இவருடைய சம்பளம் முந்தைய ஆண்டைவிட 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
How Much Salary Does A CEO Get In A Year In India? A List of Highest-Paid Indian CEOs
How Much Salary Does A CEO Get In A Year In India? A List of Highest-Paid Indian CEOs | செல்வத்தில் புரளும் இந்திய நிறுவனங்களின் சிஇஓக்கள்.. சம்பளம் இத்தனை கோடியா?