ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் மீது மோசடி புகார்.. கொளஞ்சியப்பன் கொடுத்த புகாரால் பரபரப்பு

சென்னை:
ராஜாக்கண்ணுவின்
சகோதரி
மகன்
கொளஞ்சியப்பன்
கதாபாத்திரத்தை
பயன்படுத்த
அவருக்கு
பணம்
தருவதாக
கூறி
மோசடி
செய்ததாக
இயக்குநர்
ஞானவேல்
மீது
வழக்குப்
பதிவு
செய்யப்பட்டுள்ளது.

சூர்யாவின்
2டி
தயாரிப்பில்
ஞானவேல்
இயக்கிய
ஜெய்பீம்
திரைப்படம்
ஓடிடியில்
வெளியாகி
சர்வதேச
அங்கீகாரங்களை
பெற்று
வருகிறது.

சமீபத்தில்
சீனாவில்
வெளியான
அந்த
படத்திற்கு
ரசிகர்கள்
கண்ணீர்
மல்க
ஆதரவு
தெரிவித்தனர்.

பாராட்டும்
எதிர்ப்பும்

இயக்குநர்
ஞானவேல்
இயக்கத்தில்
சூர்யா,
மணிகண்டன்,
லிஜோமோல்
ஜோஸ்,
ரஜிஷா
விஜயன்,
பிரகாஷ்
ராஜ்
உள்ளிட்ட
பலர்
நடிப்பில்
அமேசான்
பிரைமில்
வெளியான
ஜெய்பீம்
திரைப்படம்
ரசிகர்கள்
மத்தியில்
மிகப்பெரிய
வரவேற்பை
பெற்றது.
ஆஸ்கர்
போட்டி
வரை
சென்று
திரும்பிய
ஜெய்பீம்
படம்
பல
சர்வதேச
திரைப்பட
விழாக்களில்
திரையிடப்பட்டு
பாராட்டுக்களை
அள்ளி
வருகிறது.
அதே
சமயம்
படத்திற்கு
எதிர்ப்புகளும்
தொடர்கிறது.

வழக்கு தள்ளுபடி

வழக்கு
தள்ளுபடி

ஜெய்பீம்
படத்தில்
ஒரு
குறிப்பிட்ட
சமூகத்தினரை
திட்டமிட்டே
இயக்குநர்
ஞானவேல்
இழிவுப்படுத்தியதாக
அவர்
மீதும்
நடிகர்
சூர்யா
உள்ளிட்ட
படக்குழுவினர்
மீது
தொடரப்பட்ட
வழக்கை
விசாரித்த
சென்னை
உயர்நீதிமன்றம்
அந்த
வழக்கை
சமீபத்தில்
தள்ளுபடி
செய்து
உத்தரவிட்டது.
ஏற்கனவே
ஜெய்பீம்
தொடர்பான
வழக்குகளை
நீதிமன்றம்
தள்ளுபடி
செய்த
நிலையில்,
புதிதாக
ஒரு
வழக்கு
இயக்குநர்
ஞானவேல்
மீது
பாய்ந்துள்ளது.

மோசடி வழக்கு

மோசடி
வழக்கு

ஜெய்பீம்
படத்தின்
கதையில்
இடம்பெற்ற
ராஜாக்கண்ணுவின்
சகோதரி
மகன்
கொளஞ்சியப்பன்
என்பவர்,
இயக்குநர்
ஞானவேல்
மீது
சைதாப்பேட்டை
நீதிமன்றத்தில்
வழக்கு
தொடர்ந்துள்ளார்.
அதில்,
கொளஞ்சியப்பன்
கதாபாத்திரத்தை
படத்தில்
பயன்படுத்துவதற்காக
தன்னிடம்
ஞானவேல்
அனுமதி
பெற்றதாகவும்,
அதற்காக
ஒரு
கோடி
ரூபாய்
தருவதாக
கூறி
ஏமாற்றிவிட்டதாகவும்
தெரிவித்திருந்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப்
பதிவு

இந்த
புகாரின்
அடிப்படையில்,
சைதாப்பேட்டை
உரிமையியல்
நீதிமன்ற
உத்தரவின்
படி,
சாஸ்திரி
நகர்
போலீசார்,
இயக்குநர்
ஞானவேல்
மற்றும்
படக்குழுவினர்
மீது
வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
இதன்மூலமாக
மீண்டும்
ஜெய்பீம்
பட
இயக்குநர்
மற்றும்
படக்குழுவினருக்கு
சிக்கல்
ஏற்பாட்டுள்ளது.
ராஜாகண்ணுவின்
மனைவி
பார்வதியம்மாளுக்கு
சூர்யா
தரப்பு
நிவாரணம்
வழங்கியது
குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.