ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா..!- மீண்டும் தொடங்கிய சிகிச்சை..!!

ஏற்கனவே கொரோனா தொடரிலிருந்து ஜில் பைடன் மீண்டு வந்துள்ள நிலையில், தற்பொழுது அவருக்கு மீண்டும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிஉயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன் 4வது அலையும் பரவி வருகிறது.

இந்த நிலையில்,, உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு பின் , கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்தது,

இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது ஜில் பைடனுக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர பலர் வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.