டிஜிபி மூலம் எடப்பாடிக்கு பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது திமுக குறித்தான விமர்சனங்களையும் முனவைக்க அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவறுவதில்லை.

அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான

நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர்

சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடக செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 22 அன்று 7 கொலைகளும், ஆகஸ்ட் 23 அன்று 5 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய நாள்களில் நடைபெற்றவை.

பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன.

2021ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 925 கொலைகள் நடந்துள்ளன.

2019ஆம் ஆண்டு 1041 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

முந்தைய 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 101 கொலை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் எந்த துறையை நோக்கியாவது புகார்களை விமர்சனங்களை முன்வைத்தால் அந்த துறை அமைச்சர்கள் எதிர்கட்சிகளுக்கு பதிலளிப்பார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என முதல்வர் ஸ்டாலினுக்கு கீழ் வரும் காவல் துறையை நோக்கி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் அதற்கு முதல்வர் தான் பதிலளிக்காமல் டிஜிபி சைலேந்திர பாபு மூலம் பதிலளித்துள்ளார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.